"ஓம் தரே துத்தாரே துரே சோஹா"... இந்த மந்திரத்தை சொன்னா 'கொரோனா' வைரஸ் கிட்ட கூட வராது... 'தலாய்லாமா' அறிவுரை

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 29, 2020 06:46 AM

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 'ஓம் தரே துத்தாரே துரே சோஹா' என்ற மந்திரத்தை சொல்லுமாறு திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா அறிவுறுத்தியுள்ளார்.

Dalai Lama advises to control the spread of corona virus

கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் இதுவரை 106 பேர் உயிழந்துள்ளனர். சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கட்டுவிரியன் பாம்பை சூப் வைத்து குடித்ததால் தான் இந்த வைரஸ் பரவியதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள்  'ஓம் தரே துத்தாரே துரே சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மந்திரத்தை அவர் உச்சரிப்பது போன்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags : #DALAI LAMA #MANTRA #ADVICE #CORONA #CHINA