சீனாவின் 'பயோ-வெப்பன்' கொரோனா?... சந்தேகம் எழுப்பும் 'இஸ்ரேல்' விஞ்ஞானி... தனக்குத்தானே 'ஆப்பு' வைத்துக் கொண்ட 'சீனா'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பலரின் உயிரை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டின் பயோ- வெப்பன் தயாரிக்கும் ஆய்வு கூடங்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

நாடுகளுக்கிடையேயான போரின் போது வெடிகுண்டுகள், துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது தாண்டி தற்போது பயோ வெப்பன் என்ற புதிய தாக்குதல் யுக்தியை பல நாடுகளும் சட்டவிரோதமாக சோதித்து வருகின்றன.
உலக அளவில் இதற்கு தடை இருந்தாலும், ரகசியமாக பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சீனாவை உலக நாடுகள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
தற்போது சீனாவில் பரவி வரும் கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், இதுபோன்ற பயோ வெப்பன் தயாரிப்பின் போது தான் பரவியிருக்கக் கூடும் என இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிதலான 'தி வாஷிங்டன் டைம்ஸ்'க்கு அவர் அளித்த பேட்டியில், 'சீனாவின் வுஹான் நகரில் தான் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு தான், பயோ-ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை, சீனா உருவாக்கி இருந்தது. இங்கு ஆபத்தான கிருமிகள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். இங்கிருந்து தான் கொரோனா பரவியிருக்கும்' என கூறியுள்ளார். இவரது கூற்றை பயோ-வெப்பன் குறித்து அறிந்த பலரும் ஆமோதித்துள்ளனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. 'வுஹான் இறைச்சி சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்றும், பயோ- வெப்பன் ஆய்வு கூடங்களிலிருந்து இந்த வைரஸ் உருவானதாக அமெரிக்கா தான் விஷம பிரச்சாரம் செய்து வருகிறது' என்றும் சீனா தெரிவித்துள்ளது.
