'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல' ... 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்'.. வேற லெவல் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 08, 2019 04:28 PM

வட இந்தியாவில், அதாவது இந்தியில் தவிர்க்க முடியாத இளம் எழுத்தாளர் சேத்தன் பகத். ஆங்கிலத்தில் சுவாரஸ்யமான அதே சமயம் எதார்த்தமான பல நாவல்களை எழுதிய சேத்தன் பகத்திற்கு தமிழம் உட்பட பல மாநிலங்களில் இளம் வாசகர்கள் அதிகம்.

This guy sold me my own book, Chetan Bhagats viral tweet

தமிழிலும், ஆங்கிலத்திலும் 2 ஸ்டேட்ஸ், ரெவொல்யூஷன் 2020, ஹாஃப் கேர்ள்பிரண்டு உள்ளிட்ட நாவல்களை எழுதி, இளம் வாசகர்களைக் கவர்ந்த சேத்தன் பகத், தமிழ்நாட்டுடன் நல்ல நெருக்கத்தில் இருப்பவர். இவரின் 2 ஸ்டேட்ஸ் நாவலில் வரும் ஒரு மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் பல நாவல்களின் தழுவலில் பாலிவுட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவரின் பல புத்தகங்களை சாதாரணமாக சிட்டி ரயில்வே ஸ்டேஷன்களிலும், பிளாட்ஃபார்ம் புத்தகக் கடைகளிலும் கூட காண முடியும். புத்தக நிலையங்களில் தேடிச் சென்று வாங்காதவர்களும் சில நேரங்களில் ரயில்களிலும், கடைத்தெருக்களின் வழியேவும் பயணம் செல்லும்போது வாங்கிவிடுவர்.

அப்படித்தான் எழுத்தாளர் சேத்தன் பகத்திடம் ஒரு சிக்னலில் விடலைப் பையன் ஒருவன், சேத்தன் பகத் எழுதிய புத்தகம் உட்பட சில புத்தகங்களை காட்டி, கூவி கூவி விற்றுள்ளான். அவனிடம் சேத்தன் பகத்தின் வேறு புத்தகங்கள் இருக்கிறதா? என்று சேத்தன் பகத் கேட்டுள்ளார். அந்த பையனோ, இதெல்லாம் ஆன்லைன் பிரிண்டிங் புத்தகங்கள் என்று உண்மையைச் சொல்லியிருக்கிறேன். மேலும் அவை நன்றாக விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளான்.

அவனிடம் தன்னை சேத்தன் அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, அந்த பையனின் அதிர்ச்சியை ரசித்துள்ளார். மேலும் இதுபற்றி ட்வீட் போட்ட சேத்தன், தனது புத்தகங்கள் கள்ளத்தனமாக பிரிண்ட் செய்து விற்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும், அதே சமயம் இந்த பையனின் வாழ்க்கைக்கு அது உதவுவது சந்தோஷம்தான் என்றாலும், அவர் அதை நேரடி உரிமம் உள்ள புத்தகங்களைப் பெற்று விற்றால் நல்லது என்று பதிவிட்டுள்ளார்.

Tags : #CHETAN BHAGAT #BOOK #INCIDENT #VIRAL TWEET #PIRACY