அஸ்வினை மாற்றிவிட்டு... புதிய கேப்டனை நியமித்த பஞ்சாப் அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 19, 2019 11:24 PM

2020-ம் ஆண்டு நடைபெறும் 13-வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் நடைப்பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று வீரர்களை தேர்வு செய்து வந்தனர்.

k.l. Rahul to lead Kings XI Punjab in ipl 2020 13th season

இந்நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணி, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில், அதிரடியாக செயல்பட்டு வருகிறது. அதன்படி ஏலத்திற்கு முன்னதாகவே, கிரிக்கெட் ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்து வந்தது. இதற்கிடையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த 2 வருடங்களாக இருந்த அஸ்வின், கடந்த மாதம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். இதனால், அந்த அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பத் தொடங்கியது.

தற்போது ஐபிஎல் ஏலத்திற்கு மத்தியில், பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை, அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல், பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில், ‘வரவிருக்கும் 13-வது ஐபிஎல் சீசனுக்கு ராகுலைக் கேப்டனாக நியமிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை விமரிசித்த விமர்சகர்களுக்கு அவர் பதிலடி தந்துள்ளார். பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் அவருடையத் திறனைப் பார்ப்பீர்கள்’ என்றார்.

கடந்த 2018-ம் ஆண்டு் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரூ.11 கோடிக்கு ராகுலை விலைக்கு வாங்கியது. இதனிடையே தற்போது ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் அணி, மேக்ஸ்வெல் ரூ.10.5 கோடிக்கும், ஷெல்டன் காட்ரெல் ரூ.8.50 கோடிக்கும், கிறிஸ் ஜோர்டன் ரூ.3 கோடிக்கும், 15-வயது ஆப்கானிஸ்தான் வீரர் ரவி பிஸ்னோய் ரூ.3 கோடிக்கும் வாங்கியுள்ளது குறிப்பபிடத்தக்கது.

Tags : #KLRAHUL #ASHWIN