'கொரோனா' கோரத் தாண்டவம்... ஒரு வாரத்தில் 'பல மடங்கு' அதிகரிக்கும் ... 'பீதியை' கிளப்பும் சீன ஆய்வாளர்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 30, 2020 01:09 PM

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு வாரத்தில் பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Coronavirus infection may increase several times a week

கொரனா வைரஸ் சீனாவையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. 20 நகரங்களை சேர்ந்த மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஹாங்காங் - சீனா இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்களின் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு பின்னடைவை சந்தித்துள்ளது.

ஹாங்காங்கில் முகக் கவசங்கள் வாங்குவதற்காக மக்கள் மருந்துக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தேவை அதிகரித்ததால் முகக்கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு வாரத்தில் பலமடங்கு அதிகரிக்கும் என சீனாவை சேர்ந்த ஆய்வாளர்களே எச்சரிக்கின்றனர்.

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் இந்த வைரஸ் தொற்று எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் கணித்துள்ளனர். இருப்பினும் மற்றொரு புறம் நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு முழு வீச்சில் களமிறங்கியுள்ளது.

Tags : #CHINA #CORONA #INCREASE #SEVERAL TIMES #ANALYSTS WARN