'டெஸ்ட்ல நாங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கோம்'.. 'இந்த 2 பேர நெனைச்சாதான் உதறுது'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Aug 22, 2019 02:59 PM
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக ஃபுல் ஃபார்முக்கு வந்துள்ள இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் மோதவிருக்கிறது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் முறையாக விளையாடவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இந்தத் தொடர் குறித்து அதிரடியாக பேசியுள்ளார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிடம் தோற்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டித் தொடர்களை சிறப்பாக ஆடிவருவதாகவும், தற்போது தங்கள் மனநிலை பாசிட்டிவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் மன உறுதியுடனும், முழுத் திறனுடனும் ஆடவுள்ளதாக நம்பிக்கை தெரிவித்த ஜேசன் ஹோல்டர், குறிப்பாக, கோலி மற்றும் அஷ்வின் ஆகிய இருவருக்கு எதிரான ஆட்டத்தையே பெரும் சவாலாக பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
