‘காய்கறி வாங்க ரூ.30 கேட்டது ஒரு குத்தமா’.. மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 01, 2019 05:24 PM

காய்கறி வாங்க ரூ.30 கேட்ட மனைவிக்கு தலாக் சொன்ன கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wife asks for Rs 30, man gives her triple talaq in Noida

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தட்ரி என்ற பகுதியில் சபீர்-ஸைனப் என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஸைனத் காய்கறி வாங்குவதற்காக தனது கணவர் சபீரிடம் ரூ.30 கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபீர் உடனே ஸைனப்பிடம் தலாக் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கணவரின் சகோதரர்களும், மாமியாரும் சைனப்பை கடுமையாக தாக்கி எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சைனப்பை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் மன உளச்சலுக்கு ஆளான சைனப் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனால் போலிஸார் சபீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள சபீரின் குடும்பத்தாரை போலிஸார் தேடி வருகின்றனர். காய்கறி வாங்குவதற்கு பணம் கேட்டதற்காக மனைவிக்கு கணவன் தலாக் கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TRIPLETALAQ #WIFE #HUSBAND #NOIDA