'போகாதீங்க கேப்டன்'...தோனி ஓய்வு குறித்து சாக்ஷி மறைமுக விளக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 12, 2019 07:28 PM
இந்திய அணிக்கு 28 வருடங்கள் கழித்து உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர். களத்தில் கடைசிவரை நின்று போராடக் கூடியவர், விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல்கள் செய்தவர்,கூல் கேப்டன், T-20, 50 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து விதமான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் தோனி.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து அதுகுறித்த நினைவுகளை தெரிவித்து இருந்தார். இதனைப்பார்த்த ரசிகர்கள் திடீரென இதனைப்பகிர காரணம் என்ன? தோனி ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? என கேட்க, சற்று நேரத்தில் இந்தியளவில் தோனி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனார்.
மேலும் இன்று மாலை 7 மணிக்கு பிரஸ்மீட்டில் வைத்து தோனி தனது முடிவை அறிவிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால் தோனி ரசிகர்கள் ஓய்வை அறிவிக்க வேண்டாம் என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
Its called rumours !
— Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) September 12, 2019
இந்தநிலையில் திக்திக் மனநிலையில் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தோனி மனைவி சாக்ஷி பதிலளித்து இருக்கிறார். இதுகுறித்து சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில்,'' இது வதந்தி என அழைக்கப்படும்,'' என்று, மறைமுகமாக தோனி தற்போது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
