'பெயிண்ட்டுக்குள்ள முக்கி'.. 'முடிய பிடிச்சு இழுத்து' .. 'இரும்பு ராடால'.. கால்பந்து வீரரால் நேர்ந்த கொடுமை!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 19, 2019 04:14 PM
நியூ யார்க்கில் நடந்த லீக் போட்டிகளில் பலமுறை வென்ற புகழ்பெற்ற கால்பந்து போட்டியாளர் ரீஸ் தாம்சன். 26 வயதான ரீஸ் தாம்சன் தன்னை குரூரமாகக் கொடுமைப் படுத்தி வந்ததாக அவரது பெண் தோழியான 33 வயதான டேனில் தாமஸ் கூறியுள்ளார்.

பருவ வயதில் ஒரு மகளும், 8 வயதில் இன்னொரு மகளும் இருந்த நிலையில், டேனில் தாமஸ், ரீஸ் தாம்சனுடன் பழகினார். ஆனால் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒருநாள், தன்னை தூக்கத்தில் இருந்து அடித்து எழுப்பிய ரீஸ் தாம்சன், தன்னுடைய செல்போனிற்கு 4 வருடங்களுக்கு முன்பு வந்த பழைய காதலரின் மெசேஜை பார்த்ததாகவும் அதனால் கோபமாகி அடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து டேனில் தாமஸின் தலைமுடியை, ரீஸ் தாம்சன் பிடித்து இழுத்து அடித்துத் துன்புறுத்தியபோது டேனிலின் 2வது மகள் அழுதுவிட்டதாகவும், ஆனால் ஏதுமறியாத அந்த குழந்தையிடம் சென்று சமாளித்துவிட்டு படுக்கை வைத்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்து ரீஸ் தாம்சனிடம் அடி வாங்கியதாகவும், அப்போது என்னை விட்டுடு என்று கெஞ்சியும் இறங்காத ரீஸ் தனக்கு மொட்டை அடிக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார் டேனில்.
மேலும், தன்னை இரும்பு ராடால் அடித்தும், தன் தலையைப் பிடித்து பெயிண்ட் டப்பாவுக்குள் மூழ்கடித்தும், தன் செல்போனை சுக்குநூறாக உடைத்தும், தன் முகத்தைப் பிடித்து கண்ணாடி கிளாஸ் மீது மோதச் செய்தும் சந்தேகத்தின் பேரால் தன்னை மோசமாக துன்புறுத்தியதாகவும் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு டேனில் தாமஸ் பேட்டி அளித்துள்ளார். இதனை அடுத்து ரீஸ் பற்றிய இன்னொரு முகம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
