பிட்னெஸ் டெஸ்ட் மாதிரி 'அந்த' ராத்திரில என்ன ஓட வச்சாரு.. கோலி யாரை சொல்றாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 12, 2019 02:23 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அதுகுறித்த நினைவுகளை தெரிவித்திருக்கிறார்.

Virat Kohli remember special night when MSDhoni made him run

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களைக் கொண்ட கூல் கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகினாலும் தனது பேட்டிங்கால் இன்றும் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.இந்த நிலையில் தோனி குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்றை கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த 20 -20 உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த ரன்களை எடுக்க இந்தியா திணறியது. ஒருபுறம் இந்திய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க,மறுமுனையில் கோலி சிறப்பான ஆட்டத்தை ஆடினார்.யுவராஜ் விக்கெட் விழுந்தவுடன் கோலியுடன் கைகோர்த்த தோனி அடித்து ஆடாமல் ரன்களை ஓடி-ஓடி எடுத்தார்.

இதேபோல கோலியும் தனது அதிரடியை கைவிட்டு ரன்களை ஓடி,ஓடி எடுத்தார்.அந்த போட்டியில் 5 பந்துகள் மீதம் வைத்து இந்தியா வெற்றி பெற்றது.

 

இதனைத்தான் கோலி தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.புகைப்படம் குறித்து,''இந்த போட்டி என்னால் மறக்க முடியாதது.இந்த மனிதர் என்னை பிட்னெஸ் டெஸ்ட் போல ஓட வைத்தார்.மறக்க முடியாத இரவு அது,''என தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்து,லைக்குகளை அள்ளி வருகிறது.