"என் வாழ்க்கைல கெடச்ச மிகப் பெரிய பரிசு".. 9 வருஷம் கழிச்சு கெடச்ச மனைவி.. ஆனந்த கண்ணீரில் தத்தளித்த கணவன்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கேஹர் சிங். இவரது மனைவி பெயர் தர்ஷினி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக கேஹர் சிங் மற்றும் தர்ஷினியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பெயரில், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தர்ஷினியை போலீசார் தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனாலும் தர்ஷினி கண்டறியப்படாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் கூட மீண்டும் கிடைப்பார்கள் என நம்பிக்கை இல்லாமலும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து கேஹர் சிங் மற்றும் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி நிறைந்த தகவல் ஒன்று வந்து சேர்ந்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலம் கொடுகு என்னும் பகுதியில் ஒரு தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தில் தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அங்கு தான் அவர் கடந்த நான்கு வருடங்களாக இருந்து வந்தது தெரிய வந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவரை குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர்.
இத்தனை வருடங்களாக தர்ஷினி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அவருக்கு தன் சொந்த ஊர் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அந்த ஆதரவு இல்லத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல தற்போது உரிய சிகிச்சைக்கு பின்னர் அவரது குடும்பம் குறித்த விவரம் தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போன தர்ஷினி, 2018 ஆம் ஆண்டில் தான் அந்த இல்லத்திற்கு சென்றிருப்பதாக தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தின் சார்பில் தெளிக்கப்பட்டுள்ளது. அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையினரின் உதவியுடன் தர்ஷினியை அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தர்ஷினியின் மனநிலைக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் கொஞ்சம் முன்னேற தொடங்கியதாகவும் அப்போது சொந்த ஊர் பற்றி விவரங்கள் தெரிவித்து அதைப்பற்றி ஹரியானா போலீசாரிடம் பேசி பின்னர் குடும்பத்தினரை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மனைவி கிடைத்தது பற்றி ஆனந்த கண்ணீரில் கலங்கி போன கேஹர் சிங், அந்த தன்னார்வ அமைப்பிடம் இருந்து அழைப்பு வந்தது தான் தன் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்ற மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
Also Read | இளம்பெண் கல்யாணத்துக்காக நிதி உதவி கேட்ட இடத்தில்.. தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்ட கேரள இளைஞர்