மனைவிக்காக நடுராத்திரி பூஜை.. கணவர் செஞ்ச பகீர் காரியம்.. சுற்றி வளைத்த போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் மனைவிக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி அவரை கடுமையாக தாக்கியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 'P.E.T பீரியட்ல விளையாடவே விட மாட்றாங்க சார்..' விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் சொன்ன மாணவி..!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே புதுவச்சால் தரை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவருக்கும் கருவுற்றான் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணமான சில நாள்களிலேயே மனைவியை சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அனீஸ் சொல்லி வந்ததாக தெரிகிறது.
மேலும், மனைவியின் உடலில் பேய் புகுந்திருப்பதாக தனது நண்பர்களிடத்தில் அனீஸ் கூறியதாகவும் தெரிகிறது. இதனிடையே, அனீஸின் நண்பர்களான ஷிபு - ஷானிகா தம்பதியிடத்தில் இதுபற்றி அவர் பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அந்த தம்பதியினர் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த சுலைமான், ஹிமாமுதீன் மற்றும் அன்வர் உசேன் ஆகியோரை சென்று சந்திக்கும்படி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை நம்பிய அனீஸ் அந்த மூன்று பேரையும் சந்தித்து தனது மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, அவர்கள் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமென அனீஸிடம் கூறவே அதையும் அவர் நம்பியிருக்கிறார். அதன்படி, வீட்டுக்கு சென்ற அனீஸ் தனது மனைவியை கட்டிப்போட்டு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, அனீஸின் வீட்டில் இருந்து தப்பித்த அவரது மனைவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவருடன் அனீஸின் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது, அனீஸை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவருக்கு உதவிய ஷிபு, ஷானிகா, சுலைமான், ஹிமாமுதீன் மற்றும் அன்வர் உசேன் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.
இளம்பெண்ணை துன்புறுத்தியதாக அனீஸ் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இது, உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | பெற்றோர் வர தாமதம் .. சாலையில் தனியாக காத்திருந்த மாணவி.. நெகிழ வைத்த காவல்துறை அதிகாரியின் செயல்..!

மற்ற செய்திகள்
