‘அப்படி பெரிசா எதையும் மாத்தல’... ‘சாதகமாக்கிக் கொள்ள நினைத்த சீனாவுக்கு’... ‘இந்தியாவின் தரமான பதில்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 21, 2020 04:28 PM

கொரோனாவால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அன்னிய நேரடி முதலீட்டு மூலம் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த சீனாவிற்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

FDI Policy | India finally bites the Chinese bullet

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல நாடுகள் பொருளாதாரத்தில் சீர்குலைந்துள்ளன. கொரோனாவில் இருந்து மீண்டுள்ள சீனா, இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பல நாடுகளில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது. அண்மையில் இந்தியாவிலும் தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சியின் பங்குகளை, சீனா மத்திய மக்கள் வங்கி வாங்கியிருந்தது.

இதையடுத்து, மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அதிரடியாக அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில் திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவை ஒட்டி இருக்கும் நாடுகள் அன்னிய நேரடி முதலீடுகளில், இனி மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டியது.

இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பு விதிகள் எதையும் மீறவில்லை என்று மத்திய அரசு சீனாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அண்டை நாடுகளின் முதலீட்டை மறுக்கவில்லை என்றும், அதற்கான அனுமதியை அளிப்பதில் சிறிய நடைமுறை மாற்றம் மட்டுமே செய்துள்ளதாகவும், இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.