'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை?... வெளியாகியுள்ள 'பட்டியல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மிகவும் பாதுகாப்பான நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை சுமார் 22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் உலகிலேயே பாதுகாப்பான நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை மிகவும் சிறப்பாக கையாண்டு மக்களை பாதுகாக்கும் நாடுகளே இதில் பாதுகாப்பான நாடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட செயல்திறன், அரசாங்க மேலாண்மை திறன், கண்காணிப்பு மற்றும் கண்டறிதல், அவசர சிகிச்சை தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்
1. இஸ்ரேல்
2. ஜெர்மனி
3. தென் கொரியா
4. ஆஸ்திரேலியா
5. சீனா
6.நியூசிலாந்து
7. தைவான்
8. சிங்கப்பூர்
9. ஜப்பான்
10. ஹாங்காங்