'ஏசி' காற்று வழியாக ஹோட்டலில் பரவிய கொரோனா...! எப்படி அந்த '3' டேபிளுக்கு மட்டும் கொரோனா வந்துச்சு...? ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 21, 2020 01:38 PM

சீனாவில் ஹோட்டலில் சாப்பிட சென்ற 3 குடும்பங்களுக்கு அங்குள்ள ஏ.சி காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவிய சம்பவம் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Coronavirus virus spreading in hotel by AC air

சீனாவில் குவாங்சு மாகாணத்தில் இயங்கும் ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்ற 3 குடும்பங்களை சார்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே ஓட்டலில் சாப்பிட்ட 80 பேருக்கு கொரோனா வரவில்லை இதனால் குழப்பத்தில் உறைந்த சீனா இது குறித்து ஆய்வு நடத்தியது. இதுகுறித்து சீன நோய் தடுப்பு மைய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த குடும்பம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி வூஹானில் இருந்து குவாங்சு வந்தடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தாக்கிய நபர் ஜனவரி 24 ஆம் தேதியன்று குவாங்சு பகுதியில் இயங்கும் ஓட்டல் ஒன்றில் உணவருந்த வந்துள்ளனர். அதே சமயம் அங்கு மற்ற 3 குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டலில் இருந்துள்ளனர்.

3 குடும்பங்களும் வெவ்வேறு டேபிளில் இருந்த போதும், கொரோனா நோயாளி அமர்ந்திருந்த இடம் ஏ.சி. காற்று வீசும் பகுதிக்குள் இருந்ததால் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் கொரோனா பரவல் குறித்து புதிய தெளிவு கிடைக்கிறது.

இதில் கொரோனா பாதித்த நபர் மூலம் வெளிவந்த வைரஸ் கலந்த நீர்த்துளிகள் ஏர் கண்டிஷனிங் எல்லைக்குள் கொண்டு சென்றுள்ளது. பிறகு ஏர் கண்டிஷனிங்லிருந்து மூலம் வெளிவந்த நீர்த்துளிகள் அருகில் இருக்கும் மற்ற டேபிளில் இருந்தவர்களால் சுவாசிக்கப்பட்டு வைரஸ் பரவியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தான் அருகில் இருந்த இரண்டு டேபிள்களில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த வைரஸ் தொற்று கலந்த காற்றானது ஓட்டலின் மற்ற தளங்களில் தொற்று தூசுப்படலத்தின் மூலம் பரவவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்படி தூசுப்படலத்தின் மூலம் தொற்று பரவியிருந்தால், அது நீண்ட நேரம் காற்றில் நீடிக்கும் என்பதோடு, எளிதில் சிதறும் என்பதால் அதனை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்திருக்கும் என வளர்ந்து வரும் தொற்று நோய்கள் என்ற ஜர்னலில் வெளியான ஆய்வு கட்டுரையில் வெளியாகியுள்ளது.

Tags : #AC #CHINA