'இந்திய கம்பெனிகளை வாங்க ப்ளான் போட்ட சீனா...' 'இந்த நேரம் தான் சரியான சான்ஸ் என...' சீனாவின் மாஸ்டர் ப்ளான்களை தவிடு பொடியாக்கிய இந்தியா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸை பயன்படுத்தி இந்தியாவின் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்க தொடங்கியுள்ள நிலையில், நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் காராணமாக பங்குச்சந்தையில் இந்திய பெருநிறுவனங்களின் பங்கின் மதிப்பு அனைத்தும் அதிவேகமாக சரிந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை பெற்றுக்கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்த நிலையில், சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்.டி.எப்.சி வங்கியின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி கட்டுப்படுத்த சீனா முயற்சிப்பதாகவும் அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்ய வேண்டும் எனில் மத்திய அரசிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற நடைமுறை புதிதாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் நேரடி முதலீடு செய்ய முடியாது.
சீனாவை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையின் படி இந்தியாவுடன் தங்கள் நாட்டின் எல்லைகளை பகிர்ந்துள்ள நாடுகள், இந்திய கார்ப்பரேட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் உரிய அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும்.
இந்த திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக சீனா இந்திய நிறுவனங்களில் நேரடி முதலீட்டின் மூலம் பங்குகளை வாங்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த திட்டத்தை இந்தியா தவிடு பொடியாக்கியுள்ளது.
