"வைரஸ் தானா பரவுச்சா?..." "இல்ல பரப்புனாங்களா?..." 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 20, 2020 02:53 PM

கொரோனா வைரஸ் பரவியது குறித்து, அமெரிக்கா அதிகாரிகள், சீனாவிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும் என தாம் விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

US officials should go to China and investigate-Trump

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம்சாட்டி வருகிறார். கொரோனா பரவ துவங்கிய போது, உண்மையான தகவல்களை சீனா மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்  அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனை ஏற்க சீனா மறுத்து வருகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "விசாரணை குறித்து சீனாவுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சீனாவில் நேரடியாக விசாரிக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சீனா இதற்கு அனுமதிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.