'இந்தியா' உட்பட 10 நாடுகளை விட 'இதை' அதிகமாக செய்துள்ளோம்... இல்லையென்றால் 'உயிரிழப்பு' பல மடங்கு 'உயர்ந்திருக்கும்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 20, 2020 05:33 PM

இந்தியா உட்பட 10 நாடுகள் மொத்தமாக நடத்தியுள்ளதைவிட அதிக கொரோனா பரிசோதனைகளை அமெரிக்கா நடத்தியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US Corona Tests More Than India 9 Other Countries Combined Trump

அமெரிக்காவில் கொரோனாவால் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள அதிபர் ட்ரம்ப், "அமெரிக்காவில் இதுவரை சாதனை அளவாக 42 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியா உட்பட 10 நாடுகள் மொத்தமாக நடத்தியுள்ள பரிசோதனைகளைவிட அதிகமாகும்.

முன்னதாக கொரோனாவால் இங்கு 1 லட்சம் வரை உயிரிழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 60 ஆயிரத்திற்குள் உயிரிழப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். சமூக விலகலை பின்பற்றுதல் மற்றும் இந்த அளவு சோதனைகள் நடத்தப்பட்டது இவையில்லை என்றால் இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.