சீனா '130 பில்லியன்' 'யூரோ' இழப்பீடு வழங்கவேண்டும்... 'நோட்டீஸ்' அனுப்பியது 'ஜெர்மனி...' 'சீனா அளித்த கூல் பதில்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 20, 2020 05:32 PM

தங்கள் நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீனா 130 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெர்மனி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இழப்பீட்டிற்கான விவரப் பட்டியலையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது.

China must pay 130 billion Euro in compensation - Germany notice

சீனாவின் ஊஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா பரவலுக்கு சீனா மீது குற்றம்சாட்டியிருந்தன. இந்தநிலையில், ஜெர்மனியும் தற்போது சீனா மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஒருபடி மேலே போய், சீனா இழப்பீடு வழங்கவேண்டும் என்று இழப்பீடு விவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சீனா ஜெர்மனிக்கு 130 பில்லியன் யூரோ இழப்பீடாக வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சீனா எப்படி எங்களுக்கு கடன்பட்டுள்ளது? என்ற தலைப்பில் விவரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுலா வருமான இழப்புக்காக 27 பில்லியன் யூரோ, ஜெர்மன் திரைப்பட வருவாய் இழப்புக்கா 7.2 பில்லியன் யூரோ, ஜெர்மன் சிறு தொழில்கள் வருவாய் இழப்புக்காக 50 மில்லியன் யூரோ வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதற்கு, பதிலளித்துள்ள சீனா, ‘எங்கள் நாட்டின் மீதான வெறுப்பின் காரணமாக ஜெர்மன் இதனைச் செய்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.