'ஆபாச படங்களை நான் போடல'...'குமுறிய பிரபல 'சிஎஸ்கே' வீரர்'...வைரலாகும் 'ட்விட்டர்' பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 15, 2019 06:01 PM

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் அது குறித்து பிரபல சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் விளக்கமளித்துள்ளார்.

Shane Watson Instagram Account Hacked his tweet is going viral

இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஷேன் வாட்சன் எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சில ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. அதோடு அதில் பல ஆபாச படங்கள் பதிவிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்ட அவர், ஹேக்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ததையும் வெளிப்படுத்தினர்.

அதோடு வாட்சன் ட்விட்டரைப் பாராட்டி ''இவ்வளவு விரைவாக ட்விட்டர் செயல்பட்டு தனது பக்கம் திரும்பக் கிடைத்தது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் காட்டிய மந்தமான பதிலில் ஏமாற்றமடைந்ததாக விரக்தியுடன் தெரிவித்திருந்தார்.

தனது ட்விட்டில் ''எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஆபாச புகைப்படங்களுக்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது மிக விரைவாக உதவ வேண்டும். இது நீண்ட நேரம் எடுத்துகொள்கிறது, "என்று வாட்சன் ட்விட் செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 38 வயதான வாட்சன், இந்தியன் பிரீமியர் லீக்கில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #INSTAGRAM #CHENNAI SUPER KINGS #SHANE WATSON #HACKED