'அய்யய்யோ... பில்டிங் சாயுது!... யாராவது புடிங்களேன்!!'... 'பைசா' நகர கோபுரம் போல் 'சாய்ந்த' கட்டடம்... பீதியில் தெறித்து ஓடிய மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடியிருப்பு கட்டடம் திடீரென்று ஒரு பக்கமாக சாயத் தொடங்கியதால், குடியிருப்பு வாசிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அருகே கெம்பபுரா பகுதியைச் சேர்ந்தவர், ராகுல். அவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக 5 அடுக்கு குடியிருப்பு கட்டடம் உள்ளது. அது, விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த விடுதிக்கு அருகாமையில் உள்ள காலி இடத்தில், அந்த இடத்தின் உரிமையாளர் ஆழமாக ஒரு குழியைத் தோண்டியுள்ளார். அதனால், ராகுலின் கட்டடம் ஆட்டம் கண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், அந்த கட்டடம் சாயாமல் இருக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், விதிமுறைகள் மீறி ஆழமாக குழி தோண்டிய காலி இடத்து உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, பாதிப்புக்குள்ளான கட்டடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி, சுற்று வட்டாரத்தில் உள்ள 35 கட்டடங்களில் வசிக்கும் 160 நபர்களையும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றி, பக்கத்தில் அமைந்திருக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
