“அதெல்லாம் முடியாது.. என் பணத்த திருப்பிக் கொடு!”.. “ஆத்திரத்தில் பெண் பாலியல் தொழிலாளியை குத்திக்கொன்ற நபர்”!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வந்த முகுந்தா (48) என்பவர், பெங்களூரு ராஜாஜி நகரில் பேருந்துக்காக பகல் 1 மணி அளவில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அந்த இடத்துக்கு 42 வயது விலைமாதுப் பெண்மணி ஒருவர் வந்துள்ளார். அவர் முகுந்தாவை தொழில் ரீதியாக அணுகியுள்ளார்.

அப்போது முகுந்தாவிடம் அப்பெண்மணி தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள 2,500 ரூபாய் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முகுந்தாவோ, அப்பெண்ணிடம் பேரம் பேசி 1,500 ரூபாய்க்கு கொண்டுவந்ததோடு, முன்பணமாக 500 ரூபாயும் தந்துள்ளார். பின்னர் இருவரும் அப்பெண்மணி வசித்துவந்த காயத்ரி நகர் பகுதியில் உள்ள அப்பெண்மணியின் இருப்பிடத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் உறவில் ஈடுபடத் தொடங்கியபோது, அப்பெண்மணியோ முகுந்தாவிடம் பாதுகாப்பான உறவை கோரியுள்ளார். அதற்கென ஆணுறையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதனை நிராகரித்த முகுந்தா அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தன் பணத்தை திருப்பி கேட்க, அப்பெண்மணியோ தரமறுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முகுந்தா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அப்பெண்மணியின் வயிற்றிலும், கழுத்திலும் மாறிமாறி குத்திக் கொன்றுவிட்டு தப்பியுள்ளார். இதனிடையே பள்ளி சென்றிருந்த அப்பெண்ணின் மகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தன் அம்மா கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸிடம் தகவல் கூறினார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சிசிடிவி காமிராவை சோதனை செய்து, குற்றவாளி முகுந்தாவை கைது செய்துள்ளனர்.
