‘தீபாவளியை முன்னிட்டு’.. ‘இலவச அன்லிமிடட் ஆஃபரை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Oct 26, 2019 11:12 AM

தீபாவளியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லா மற்றும் அளவில்லா அழைப்பு சேவையை வழங்குகிறது.

BSNL Offers Free Unlimited Voice Calling Benefits on Diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 24 மணி நேரத்திற்கு அளவில்லா அழைப்பு  சேவையை வழங்குகிறது. லேண்ட் லைன் மற்றும் செல்ஃபோன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

கட்டணமில்லா மற்றும் அளவில்லா அழைப்பு சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையன்று தடையின்றி பேச முடியும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : #DIWALI #BSNL #FREE #UNLIMITED #CALL #OFFER #CUSTOMERS