'சுஜித்தின் பெற்றோருக்கு'.. 'ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணித்த சுஜித்'.. ரஜினியின் உருக்கமான ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 29, 2019 03:06 PM

ஆழ்துளைக் கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்து, 4 நாள் போராட்டத்துக்கு பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 

surjith dead after felled in borewell, Rajinikanths tweet

பல்வேறு தலைவர்களும், மக்களும் சிறுவன் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனைகளை நடத்தி, உருகவைத்தனர். சுஜித்தின் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களும் கடினமாக போராடினர். 

ஆனால் இத்தகைய எந்த முயற்சியும் பலன் தராமல் போனதை அடுத்து. சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்றும் அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதோடு, சுஜீத்தின் பெற்றோருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags : #RAJINIKANTH #RAJINI #RIPSURJITH