‘பள்ளியில் மயங்கி விழுந்து’... ‘மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்'... 'அதிர்ச்சியடைந்த தோழிகள்'... 'கதறித்துடித்த பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 11, 2019 03:15 PM

12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl died after falling in school bathroom unconsciously

கரூர் மாவட்டம் வடக்கு பசுபதிபாளையம் முதல் தெருவில் வசித்து வருபவர்கள், ஆனந்த்-ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகளின் கோமதி. இவர் கரூர், தேர் வீதியில் உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே கோமதி, உடல்நலகுறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஓரளவு உடல்நலம் தேறியதும், தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல், இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர், முகம் அலம்புவதற்காக கழிவறைக்கு சென்றபோது, மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் தோழிகள், உடனடியாக ஆசிரியர்களிடம் சென்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன, ஆசிரியர்கள், உடனடியாக கோமதியை மீட்டு கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில், கோமதியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, கோமதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக, கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தங்களது மகள் உயிரிழந்ததைக் கேட்டு, பெற்றோர் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #DIED