'நீங்கதான் நிஜ ஹீரோ!'.. 'தயங்கிய வீரர்கள்'.. 'நெருப்புக்குள் புகுந்து 11 பேரை மீட்ட தனி ஒருவன்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 09, 2019 10:44 AM

வடக்கு டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ளது ஆனஜ் மண்டி. இங்குள்ள பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், அதிகாலை நேரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ பரவியது.

fire man saves 11 peoples from Delhi fire tragedy

இந்த தீ விபத்தில் சிக்கி 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே கலங்கவைத்தது. இதனிடையே தீ விபத்தில் சிக்கிக் கதறிக்கொண்டிருந்த 11 தொழிலாளர்களை ஒரு தனி ஆளாய் நுழைந்து காப்பாற்றியுள்ள தீயணைப்பு வீரர் பலதரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அதிகாலை 5.22 மணிக்கு இந்த தீவிபத்து உண்டான நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனாலும் வீரர்கள் யோசித்தபடி நின்றுகொண்டிருந்துள்ளனர். அதே சமயம், கொஞ்சமும் தயக்கமின்றி, தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, புகைமூட்டத்துக்குள் சிக்கி மயங்கிக் கிடந்த 11 பேரை ஒருவர் ஒருவராக போய் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் இவர்களும் தீக்கிரையாகியிருப்பார்கள். இதில் ராஜேஷ் சுக்லாவுக்கு ஆங்காங்கே தீக்காயம் உண்டான நிலையில், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவங்கு வந்து அவரை சந்தித்த மத்திய அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவரை,  ‘நீங்கதான் சுக்லா நிஜ ஹீரோ’ என்று பாராட்டினார்.

Tags : #DELHI #DELHIFIRE