5 மொழிகள்..'இலவச' வை-பை.. 'பாட்டு, படம்', சீரியல்.. இனி 'சென்னை' மெட்ரோல.. இதெல்லாமே கெடைக்கும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 23, 2019 03:52 PM

பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் மெட்ரோ ரெயில்களில் இலவச வை-பை வசதியுடன் படங்கள், பாடல்களை பயணிகள் கண்டுகளிக்க முடியும்.

watch movies, songs on Chennai metro details here

இதற்காக 'வைபை' வசதியை விரிவாக்கம் செய்ய சென்னை மெட்ரோ முடிவெடுத்துள்ளது. அதன்படி பயணிகளுக்காக ஆப் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஆப்பை மொபைலில் பதிவேற்றம் செய்து கொண்டால், பயணத்தின்போது தங்களுக்கு பிடித்த படங்கள், பாடல்கள், சீரியல் போன்றவற்றை பயணிகள் இலவசமாக கண்டு மகிழலாம்.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பாடல்களை கேட்டும். படங்களை கண்டுகளித்தும் மகிழலாம். பயணிகளுக்கு போர் அடிக்காமல் இருக்கும் பொருட்டும், பயணத்தை இனிதாக மாற்றவும் இந்த வசதியை தாங்கள் அறிமுகம் செய்வதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

வெறும் 5 நொடிகளுக்குள் படத்தையே டவுன்லோடு செய்து விடலாம் என்றும், தினசரி புதிய படங்கள், பாடல்கள், சீரியல்கள் ஆப்பில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மெட்ரோ இந்த வசதியை அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழிமுறைகள்:

1.மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று உங்கள் மொபைல் வைபை-யை ஆன் செய்ய வேண்டும்.

2.பின்னர் மெட்ரோ வைபையை கனெக்ட் செய்ய வேண்டும்.

3.மெட்ரோ ரெயில் நிலையத்திற்கான ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும் (ஆப் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை)

4.நீங்கள் பார்க்க விரும்பும் படங்கள், சீரியல்கள், பாடல்களை தேர்வு செய்து பார்க்கலாம். வேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்த படங்களை டவுன்லோடு செய்து பின்னர் ஆப் லைனில் சென்று பார்க்கலாம்.

5.தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.