‘இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்’.. ‘இறுதி சடங்கில் நடந்த மிராக்கிள்’.. எப்படி தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Oct 14, 2019 03:04 PM
ஒடிசாவில் இறுதி சடங்கின்போது உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் எழுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்துள்ள பகல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சிமானச் மாலிக் (55). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற சிமானச் மாலிக் வீடு திரும்பவில்லை. அதனால் அவரது உறவினர்கள் சிமானச் மாலிக்கை தேடி சென்றுள்ளனர். அப்போது ஆடு மேய்க்கும் பகுதியில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மாலிக் உயிரிழந்துவிட்டார் என எண்ணி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கடைசியாக அவரை மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மாலிக்கின் தலை அங்கும் இங்கும் அசைந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பின்னர் சிலர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாலிக்கை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கடுமையான காய்ச்சலால் மாலிக் மயங்கி விழுந்திருப்பதாக தெரிவித்துள்ளார். நல்லவேளையாக அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக உடலில் அசைவு தெரிந்ததால் மாலிக் காப்பாற்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.