“5வது மாடி பால்கனியில் இருந்து”.. “7 வயது சிறுவனை, கயிறைக் கட்டி இறக்கிய மூதாட்டி”!... வீடியோவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 10, 2020 07:05 PM

பூனை ஒன்றை காப்பாற்றுவதற்காக 5வது மாடியில் இருந்து 7 வயது சிறுவனை கயிற்றில் இறக்கி, விபரீதத்தில் ஈடுபட்ட மூதாட்டியின் செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

elder woman dangles 7 yr old boy from 5th floor balcony

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பென்கான் பகுதியில் டாங் என்கிற பாட்டி ஒருவர், தனது பேரன் ஹூஹூவை, பூனையை காப்பாற்றுவதற்காக 5வது மாடியில் இருந்து பால்கனி வழியே கயிறைக் கட்டி கீழேயிறக்கும் ஆபத்தான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கட்டிடத்தின் கீழே நின்றவர்கள் குரலெழுப்பியும் பாட்டி கேட்பதாய் இல்லை. இந்த வீடியோ இணையத்தை பதறவைத்துள்ளது.

குறிப்பு: வீடியோவில் இருக்கும் பதறவைக்கும் காட்சிகளால் வீடியோ இணைக்கப்படவில்லை.

Tags : #RISK #GRANDMOTHER #CHINA