அப்படியே 'அல்லேக்காக' தூக்கி 5 மாடி கட்டிடத்தை வேறு இடத்திற்கு நகரத்தினர்..ஊழியர்கள் கட்டிடத்தில் இருக்கும்போதே நிறுவப்பட்டது...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 08, 2020 01:45 PM

சீனாவில் 5 மாடி கட்டடம் ஒன்று அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் முழுவதும் அகற்றப்பட்டு, 24 மீட்டர் தூரத்தில் நிறுவப்பட்டது.

5-storey building is in a different place and was

சான்டோங் மாகாணம் ஜினான் நகரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் இருக்கும் பகுதி வழியே அதிவிரைவு சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

சாலை அமைக்க கட்டிடம் இடையூறாக இருந்ததால், சுமார் 8,000 டன் எடை கொண்ட கட்டிடத்தை கட்டுமானத்தோடு பெயர்த்து எடுக்கப்பட்டு 24 மீட்டர் தூரத்தில் கொண்டு சென்று நிறுவப்பட்டது. டிசம்பர் 27 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்ற இப்பணியின்போதும் கட்டிடத்தில் நிறுவன ஊழியர்கள் வழக்கம் போல பணியில் இருந்தனர்.

Tags : #CHINA #BUILDING #ROAD