'தாலி' கட்டுவதற்கு 'முன்பாக' வந்த போன் கால்.. 'நொடியில்' மாறிய மாப்பிள்ளை.. செம டுவிஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 23, 2019 05:23 PM

தாலி கட்டுவதற்கு முன்பாக வந்த போன் காலால் மாப்பிள்ளை மாறிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

groom changed in last minute of the wedding details

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும்- பாக்யஸ்ரீ என்பவருக்கும்  பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேற்று(22) நடைபெறுவதாக இருந்தது. தாலி கட்டுவதற்கு முன் பாக்யஸ்ரீயின் அம்மாவிடம் பேசிய மர்ம நபர் ஒருவர் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறினார்.

இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும்- பெண் வீட்டாருக்கும் மண்டபத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. இதனால் நொந்துபோன பெண்ணின் தந்தை மண்டபத்தில் யாராவது என் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்த ஆனந்த் என்னும் வாலிபர் தான் திருமணம் செய்துகொள்வதாக கூறி, பாக்யஸ்ரீயின் கழுத்தில் தாலி கட்டினார். மாப்பிள்ளை நொடியில் மாறி திருமணம் செய்து கொண்டது சினிமா பாணியில் ருசிகர நிகழ்வாக அமைந்தது.