'பெயரை கேட்டு டார்ச்சர் பண்ணினாங்க...' 'காய்கறி விற்க வந்தவரிடம் ஐ.டி கார்டு கேட்ட நபர்...' அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து... பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் காய்கறி விற்க வந்த நபரிடம் அடையாள அட்டையை கேட்டு அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 10ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள பத்ராபூர் பகுதி தெருவில் காய்கறி விற்று வந்த நபரை ஒருவரை கண்முன் தெரியாமல் தாக்கியுள்ளார். அந்த நபரின் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று (13.04.2020) திங்களன்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக காய்கறி வியாபாரம் செய்யும் ஒரு சிலர் தள்ளு வண்டியில் காய்கறிகளை விற்று வருகின்றனர். அதே போல் முகமது சலீமும் காய்கறியை விற்க அப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த பிரவீண் பப்பார் என்னும் நபர் 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் ஏன் இப்படி காய்கறி விற்கிறீர்கள் எனவும் அவருடைய அடையாள அட்டையை காட்ட சொல்லி உள்ளார். அடையாள அட்டை இல்லாததால் தன்னுடைய பெயர் முகமது சலீம் தெரிவித்துள்ளார் அந்த காய்கறி விற்பனையாளர். இதனால் பிரவீன், சலீமை அடித்து உதைத்துள்ளார்.
மேலும் இது குறித்து சலீமிடம் விசாரணை நடத்தியதில், தனது வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில் தான் வண்டியோடு நின்றுகொண்டிருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த காய்கறிவண்டி சலீமின் சகோதரர் வண்டி எனவும், அவர் மதிய உணவிற்கு செல்லவே, தான் அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் மதியம் 1.30 மணியளவில் நான்கு பேர் சலீமை நோக்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தன் என் ஆதார் அட்டையை கேட்டதாகவும், ஆதார் அட்டை வீட்டில் இருப்பதாக சொல்லியுள்ளார். அதையடுத்து சலீமிடம் அவரது பெயரை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். சலீம் அவருடைய பெயரை சொல்லவே, அந்த கும்பலில் இருந்த பிரவீன் பப்பர், சலீமை அங்கிருக்கும் குச்சியை வைத்து தாக்கியுள்ளார். மேலும் இப்பகுதியில் வந்து காய்கறிகளை விற்க கூடாது எனவும் மிரட்டியதாக கூறியுள்ளார்.
வீடியோவை ஆதாரமாக கொண்டு போலீசார் பிரவீன் பப்பரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரவியதால் அனைவரும் பிரவீண் மீது அருவருப்படைந்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாதபடி முடிந்த அளவிற்கு வீட்டின் அருகிலேயே பொருட்களை வாங்கும் படி கூறியுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் நம்மிடம் இருக்கும் வேற்றுமைகளை தொலைத்து ஒற்றுமையுடன் கொரோனோவை ஒழிக்கவேண்டும் என சமூகவலைத்தளங்களில் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.