‘ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி’... ‘இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்’... ‘பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு’... ‘தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தகவல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தமிழக சுகாதாரத் துறை பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த 110 பேரும் தமிழகத்தின் பல்வேறு 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களில் 1,103 பேர் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்ர்களில் 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய நபர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலும், 81 பேர் அரசு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வயதானவர்கள் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
