'ஒரே மருத்துவமனையில் இருந்தும்...' 'தந்தை உடலை பார்க்க முடியாத மகன்...' 'நெஞ்சை' உருக்கும் 'சோக சம்பவம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 13, 2020 03:34 PM

கொரோனா பாதிப்பில் உயிரிழந்த தந்தையின் உடலை, உடனிருந்த அவரது மகனால் பார்க்க முடியாத நிலை சோகத்தை ஏற்படுத்தியது.

the father infected corona and died-Son who cannot see the body

கடலுார் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்த, தந்தை மகன் ஆகயோர், கடந்த மார்ச் மாதம் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றனர். அங்கு நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில், இருவரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், மார்ச், 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், டில்லி நிஜாமுதீன் பகுதியில் தங்கியவர்களை, சுகாதாரக் குழுவினர் மீட்டு, மார்ச் 31-ம் தேதி, அங்குள்ள தீன் தயாள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தந்தை மகன் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஏப்ரல் 7ஆம் தேதி இருவரும் லோக்நாயக் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, தந்தையின் உடல்நிலை மோசமாகி, 9-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இது, மறுநாள் காலை, அவரது மகனுக்கு தெரிவிக்கப்பட்டது. விருத்தாசலத்தில் உள்ள குடும்பத்தினர் அனுமதியுடன், தந்தையின் உடல் டெல்லியில் அடக்கம் செய்யப்பட்டது. அதேநேரம், தொடர் மருத்துவ கண்காணிப்பில் மகன் இருந்ததால், தந்தையின் உடலைக் கூட,பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தந்தை இறந்த பின்பும், அவரது உடலை காணும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என, மகன் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதற்கிடையில், மகன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். அவரை தொடர் கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.