நீங்கள் TABLIGHI JAMAAT-ன் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவரா? ... கலந்து கொண்டவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களா ? ... அப்படின்னா இந்த செய்தியை உடனே செக் பண்ணுங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 01, 2020 10:08 AM

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Government announce number for Tablighi Markaz people

தப்லிஹி மாநாட்டிற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பலர் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் சிலர், பரிசோதனை செய்ய விரும்பாமல் வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா பரவலைத் தடுக்க மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 'மார்ச் 8 முதல் 20 வரை டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் கலந்து கொண்டு இன்னும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படமால் இருப்பவர்கள் 080 - 29711171 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.

அதே போல தமிழக அரசும், தமிழகத்திலிருந்து தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்ட யாரேனும் இன்னும் பரிசோதனை செய்யாமல் இருந்தால் உடனடியாக 7824849263, 044 - 42674411 ஆகிய எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #TABLIGHI JAMAAT #DELHI #LOCKDOWN