‘ஆட்டோ, டேக்ஸி டிரைவர்களின் அக்கவுண்ட்டில் ரூ.5000 போடப்படும்’.. டெல்லி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 02, 2020 09:46 PM

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டேக்ஸி இ-ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Transfer Rs5000 to auto, taxi drivers bank account, Says Kejriwal

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-டேக்ஸி போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என கருதி அவர்களுக்கு 5000 ஆயிரம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணத்தொகை அடுத்த 7 முதல் 10 நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கட்டிடத் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONAVIRUS #CORONA #DELHI #AUTO #TAXI #LOCKDOWN #ARVINDKEJRIWAL