'1,131 பேர்' தமிழகத்துக்கு 'வந்துள்ளனர்'... '515 பேர்' மட்டும் 'அடையாளம்' காணப்பட்டுள்ளனர்... 'மீதம் உள்ளவர்கள்...' 'ப்ளீஸ் நீங்களாகவே வந்துருங்க...' 'சுகாதாரத்துறை வேண்டுகோள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 01, 2020 12:33 PM

டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Corona Affected from Delhi-Request to come forward on their own

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ‘தமிழகத்தில் ஏற்கெனவே 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதின் ஜமாத் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.

டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது என்றும் குறிப்பிட்ட அவர், டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களில் 10 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், இதில் ஜாதி மத பாகுபாடுகள் எதுவுமில்லை. தாங்களாகவே முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #DELHI #TAMILNADU #COME FORWARD