எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா உறுதி!... 'கான்டாக்ட் ட்ரேசிங்'கை தீவிரப்படுத்திய நிர்வாகம்!... டெல்லியில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 02, 2020 07:11 PM

டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

delhi aiims doctor tests positive for novel coronavirus

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா நோய்த் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டதாக ஜனவரி 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. அது சீனாவின் வூஹானில் இருந்து பயணம் செய்து திரும்பியவருக்கு ஏற்பட்ட தொற்றாகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் தற்போது வரை 1,965 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனினும் அவரது விவரங்களை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிடவில்லை.

இதுகுறித்து எய்ம்ஸ் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ள மருத்துவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து பணியாற்றி வருபவர். அவர் உடலியல் துறையில் பணியமர்த்தப்பட்டவர். மேலும், மதிப்பீடு செய்வதற்காக தனியாருக்கான புதிய வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பரிசோதனையில் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மருத்துவருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடமறிதல் நெறிமுறை தொடங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

 

Tags : #CORONA #CORONAVIRUS #DELHI #AIIMS #DOCTOR