'இதுக்கு ஒரே வழிதான் இருக்கு!'.. 'பாட ஆரம்பித்த கமிஷனர்!'..'நொடியில் நின்ற ஆர்ப்பாட்டம்!' .. 'மெய்சிலிர்க்க' வைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 20, 2019 12:10 PM

பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் நடந்து வந்தது.

Bangalore Cops sings national anthem to stop violence

இந்த நிலையில் அங்கு வந்த பெங்களூர் மத்திய போலீஸ் துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து போகும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இதுபோன்ற போராட்டங்களில் சமூக விரோதிகளும், உள் நுழைந்து தங்களுடைய சுய லாபத்திற்காக போராட்டத்தை வேறு வகைகளில் திசைதிருப்பிவிடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் ஊடுருவி தங்களுடைய வன்முறையைத் தூண்டி அப்பாவி பொதுமக்களுக்கு ஆபத்துகளை விளைவிக்க காத்திருக்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார். எனினும் இதைக் கேட்டும் சட்டென போராட்டக்காரர்களால் போராட்டத்தை கைவிட முடியவில்லை. இதனையடுத்து சமயோஜித புத்தியை பயன்படுத்திய சேத்தன் சிங் ரத்தோர் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக தேசிய கீதத்தை மைக்கில் பாட தொடங்கினார்.

உடனே மனம் மாறி அனைவரும் எழுந்து நின்று போலீஸ் துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோருடன் சேர்ந்து தாங்களும் தேசிய கீதத்தை பாட தொடங்கினார். அதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இத்தனை போராட்டங்களுக்கும் நடுவில் துணை கமிஷனரின் விரிந்த வித்தியாசமான முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : #BANGALORE #CABBILL2019