‘கால் டாக்சி டிரைவரால்’... ‘மாடலுக்கு நேர்ந்த கொடூரம்’... 'உறைய வைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 25, 2019 12:00 AM

கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், பெங்களூருவில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Bengaluru cabbie held for brutal murder of Kolkata model

பெங்களூரு விமான நிலைய சுற்றுச் சுவர் அருகே கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி, 32 வயதான ஒரு பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டநிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொலையானப் பெண் யார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். இதையடுத்து அப்பெண்ணின் கழுத்தில் இருந்த டாட்டூ மற்றும் அவர் அணிந்திருந்த உடை ஆகியவற்றை வைத்து, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்திற்கு தனிப்படைகள் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கொல்கத்தாவை சேர்ந்த பூஜா சிங் டே என்ற மாடல் காணாமல் போனதாக அவரது கணவர் அளித்திருந்த அடையாளங்களோடு ஒத்துப்போனதை அடுத்து, அவர்களிடம் மாடலின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் பூஜாவின் இ-மெயில், எஸ்எம்எஸ் என எல்லாவற்றையும், கொலையாளியை கண்டுப்பிடிப்பதற்காக ஆய்வு செய்தனர். அப்போது பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்வதற்காக, பூஜா சிங், ஓலா டாக்சி புக் செய்த செய்ததற்கான இ-மெயில் வந்ததை கடைசியாக வந்தது தெரியவந்தது.

இதை வைத்து, வழக்குப்பதிந்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பூஜா சிங்கை கொலை செய்தது ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார்  தெரிவித்தபோது, ‘கொல்கத்தாவில் வசிக்கும் மாடல் அழகியான பூஜா சிங், கடந்த ஜூலை 30-ம் தேதி ஒரு ஈவன்ட் மேனேஜ்மண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு வந்துள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் கொல்கத்தா செல்ல ஓலா கால் டாக்சி செல்போன் மூலம் அழைத்துள்ளார்.

அப்போது நாகேஷ் என்கிற கால் டாக்ஸி ஓட்டுநர் பூஜா சிங்கை காரில் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கி நகர்ந்தார். கால் டாக்சியில் வந்த பூஜா சிங் மிகவும் அழகாகவும் கோடீஸ்வர வீட்டுப் பெண் போல இருந்ததாலும்,  பூஜா சிங்கிடம் பேச்சுக் கொடுத்துள்ளார் ஓட்டுநர் நாகேஷ். பின்னர் தான் கஷ்டப்படுவதாகவும், கடனில் வாங்கிய வண்டிக்கு மாதத் தவணை செலுத்த கையில் பணம் இல்லாததால், பணம் அதிகம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். அதற்கு பூஜா சிங் மறுக்கவே, அவரது கைப்பையில் எப்படியும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என யோசித்த ஓட்டுநர், தனிமையில் இருந்ததை பயன்படுத்தி அவரை இரும்புக் கம்பி ஒன்றில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த பூஜா சிங்கை, கொடூரமாக தாக்கி கொன்றபின், அவரது உடலை கேம்பகவுடா சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே போட்டுள்ளார். பின்னர் பூஜாவின் கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமுமே நாகேஷுக்கு மிஞ்சியது. இதையடுத்து பூஜாவின் கைப்பை, அவரது அடையாள ஆவணங்கள் செல்போன் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நாங்கள் சென்று பூஜா சிங் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தோம்’ என தெரிவித்தனர்.

Tags : #MODEL #BANGALORE #KOLKATA #CALLTAXI