'இனிமேல் பைக்குல உக்காரும்போது' ... 'இது தானே மைண்ட்ல வரும்' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 12, 2019 09:57 AM

படமெடுத்து ஆடும் நாக பாம்பு ஒன்றை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Bangalore man catching a cobra is being shared worldwide

நான் பெரிய வீரன் என கூறிக்கொண்டாலும், பாம்பு என்றால் ஒரு அடி தள்ளி நிற்பவர்கள் தான் அதிகம். ஆனால் இளைஞர் ஒருவர் சீறி எழுந்த பாம்பு ஒன்றை எந்த வித உபகரணங்களும் இல்லாமல் பிடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  பெங்களூரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் சீட்டிற்கு அடியில் நாக பாம்பு ஒன்று ஒளிந்து கொண்டது. அப்போது இளைஞர் ஒருவர் சிறிய கம்பு மூலம் குத்தி பாம்பை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.

அப்போது சீட்டிற்கு அடியில் இருந்து நல்ல பாம்பு வீரிட்டு எழுந்து படமெடுத்து ஆடுகிறது. அது சுற்றி இருந்தவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த இளைஞர் எந்தவித சலனமும் இல்லாமல், கைகளில் எந்தவித ஆயுதமும் இன்றி பாம்பை லாவகமாக பிடிக்கிறார். சுற்றி இருந்தவர்கள் அதனை விடியோவாக எடுக்க அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #KARNATAKA #SNAKE #COBRA #TVS VICTOR #BANGALORE