'இல்லெனினும் ஈதலே நன்று'.. ஒரே நாளில் 1000 பேருக்கு உணவளித்து சாதனை புரிந்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | May 28, 2019 12:28 PM

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நாளில் 1000 பேருக்கு உணவு வழங்கி சாதனை படைத்துள்ளதை அடுத்து அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வருகிறார்.

youth does record after serving free food for 1000 people in a day

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சர்வ் நீடி என்கிற சேவை அமைப்பை நடத்தி வருபவர் கவுதம் குமார். இந்த இளைஞர் ஆதரவற்றவர்களுக்கான பசியைப் போக்கும் வகையில் தேடிச் சென்று உணவளிக்கும் சேவை மனப்பான்மையுடன் இந்த சர்வ் நீடி அமைப்பை நடத்தி வருகிறார்.

அவ்வகையில் கவுதம் குமார், இம்முறை ஹைதராபாத்தின் காந்தி மருத்துவமனை, ராஜேந்திர நகரில் உள்ள மையம், சவுட்டப்பல் அம்மா நானா ஆதரவற்ற இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்த 1000 பேருக்கு ஒரே நாளில் உணவை வழங்கி யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்கிற புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதோடு, அதற்கான விருதும் பெற்றுள்ளார்.

இந்த விருதை, யுனிவர்ச புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் இந்திய பிரதிநிதி கே.வி.ரமணா மற்றும் தெலுங்கானா பிரதிநிதி டி.எம்.லதா இருவரின் கைகளாலும் கவுதம் குமார் பெற்றுள்ளார். இதுபற்றி பேசிய கவுதம் குமார், ‘140 தன்னார்வளர்களுடன் இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம் 14 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. யாருமே பசியில் வாடக் கூடாது என்கிற நோக்கில் பலரின் உதவிக்கரங்களுடன் இந்த அமைப்பை நடத்தி வருகிறோம்’ என்று பேசியுள்ளார்.

Tags : #UNIVERSALBOOKOFRECORDS #HYDERABAD #YOUTH #SERVENEEDY