'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 15, 2019 11:22 PM

கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் உணவைத் திருடியதாகக் கூறி அகாலியைச் சேர்ந்த இளைஞர்களால் குரூரமாகத் தாக்கப்பட்டு இறந்த பழங்குடி இளைஞர் மது.

tribal madhus sister joins in kerala police as special candidate

பாலக்காட்டின் வனக்குகைகளில் வசித்து வந்த மது, கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்டும் கேரளாவைச் சேர்ந்த 16 இளைஞர்களால் அடித்தேக் கொல்லப்பட்ட உருக்குலைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியானதை அடுத்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் மதுவின் பிரேத பரிசோதனைக்காக, ஆய்வகத்தின் வாசலில் காவலர் தேர்ச்சி பெற்ற ஆர்டர் காப்பியோடு நின்றுகொண்டிருந்த மதுவின் சகோதரி சந்திரிகா, அந்த துக்கத்துடனேயே அன்று நடைபெற்ற காவலர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்றார். தேர்ச்சியும் பெற்றார். அவருடன் இன்னும் 24 பெண்கள் இந்த பணியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது கேரளாவில் காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ள சந்திரிகா, தனது வேலையை தனது சகோதரன் மதுவுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார். கேரள பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் நிகழ்ந்த இந்தத் தேர்வில் வெற்றி பெற்று காவலர் பணியில் சேர்ந்துள்ள சந்திரிகாவை கேரள காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கவுரவித்துள்ளது.

Tags : #KERALA #MADHU #FOOD #POLICE