'ஐயோ பாவம்'...'மாடுகள் எல்லாம் குளிர்ல நடுங்குது'...'ஸ்வெட்டர்' வாங்க நிதி ஒதுக்கிய நகராட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Nov 25, 2019 01:07 PM
கடும் குளிரிலிருந்து மாடுகளை காப்பாற்ற அவற்றிற்கு கம்பிளி வாங்க அயோத்தி நகராட்சி உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மாடுகளை பராமரிக்க அதற்கென ஒரு தொகை ஒதுக்கப்பட்டது, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பைசிங்பூரில் கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு கம்பிளி வாங்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆயிரத்து 200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பிளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அரசின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் கடும் குளிரில் வாழும் நிலையில், ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநில அரசு, மாடுகளுக்கு வாங்கி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
