விசாகப்பட்டினம்: விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் .. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு பாதிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள், திரைக்கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம் அளிப்பதாகவும், சிகிச்சை பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
Tags : #VIZAGGASLEAKAGE #JAGANMOHANREDDY
