‘ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி’... ‘மக்கள பிரிக்காதீங்க’... ‘புதிய உத்தரவுக்கு கிளம்பிய எதிர்ப்பு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 06, 2019 04:28 PM

ஆந்திரப் பிரதேச மாநில முதல்வராக பதவியேற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி, அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய உத்தரவை, அம் மாநில பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளது.

Jagan announces monthly allowance for Christian pastors

திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில், இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக சமீபத்தில் கூறினார். இது கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்துவர்களுக்கு உதவும் வகையில், போதகர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, தற்போது அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அது என்னவென்றால், கிறிஸ்துவ போதகர்களுக்கு, மாதம்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என்று தற்போது சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையடுத்து ஆந்திரா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், இதற்கான சுற்றறிக்கையை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி, கிராம தொண்டர்கள் உதவியுடன் போதகர்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து, 15 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறது. தற்போது இந்த அறிவிப்புக்கு அம்மாநில பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

`ஆந்திர மக்களை மத அடிப்படையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பிரித்துவருகிறது. கணக்கெடுப்பு நடத்துதல் மற்றும் போதகர்களுக்கு பணம் கொடுக்க, மக்களின் பொதுப் பணத்தை செலவிடுவது இழிவான செயல். இது அரசால் ஊக்குவிக்கப்படும் மத மாற்று நடவடிக்கையாகும். ஒய்.எஸ்.ஆர் கட்சியின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க கடுமையாக கண்டிக்கிறது’ எனக் கூறியுள்ளது.

Tags : #JAGANMOHANREDDY #ANDHRAPRADESH #BJP