காத்துக்காக ‘கதவை’ திறந்து வச்சு தூங்கிய குடும்பம்.. வீட்டுக்குள் தெரிஞ்ச ‘டார்ச்’ வெளிச்சம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 07, 2020 04:59 PM

காற்று வரவேண்டும் என கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CellPhone, gold chain robbery near Maduravoyal in Chennai

சென்னை மதுரவாயல் சீமதம்மன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பகுதியில் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு தூங்குவதற்கு முன்பு காற்றி வர வேண்டும் என கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அதிகாலையில் மணிகண்டனின் மனைவி திடீரென கண் விழித்து பார்த்தபோது வீட்டுக்குள் யாரோ டார்ச் லைட் அடித்து எதையோ தேடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே சத்தம்போட்டு கணவரை எழுப்பியுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்றுள்ளனர், ஆனால் அதற்குள் திருடன் அங்கிருந்து தப்பி சென்றார். இதன் பின்னர் வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது செல்போன், 4 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி சென்ற அவசரத்தில் திருடன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரா காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். காற்றிற்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீட்டுக்குள் திருடன் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.