ஆந்திர முதல்வர் ‘ஜெகன்மோகன் ரெட்டி’க்கு கொரோனா பரிசோதனை..! வெளியான தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 18, 2020 10:23 AM

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Andhra CM Jagan Mohan Reddy tests negative for Coronavirus

ஆந்திர மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 30 நிமித்திற்குள் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் சுமார் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தென் கொரியாவில் இருந்து அம்மாநில அரசு சார்பில் வாங்கப்பட்டது.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.