129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்!... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Dec 22, 2019 01:03 AM

வோடஃபோன் நிறுவனம் அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 4 புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

Vodafone 3 New Unlimited Prepaid Plans at Rs 129 Rs 199 Rs 269

வோடஃபோன் நிறுவனம் 24 ரூபாயில் தொடங்கி 269 ரூபாய் வரை 4 புதிய சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 269 ரூபாய் சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 4 ஜிபி டேட்டா, 600 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடஃபோன் பிளே, ஜி5 சேவைக்கான வசதிகள் ஆகியவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள 199 ரூபாய் சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடஃபோன் பிளே, ஜி5 சேவைக்கான வசதிகள் ஆகியவை 21 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய 129 ரூபாய் சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா 300 எஸ்.எம்.எஸ் மற்றும் வோடஃபோன் பிளே, ஜி5 சேவைக்கான வசதிகள் ஆகியவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.  24 ரூபாய் சலுகையில் 100 நிமிடங்களுக்கு ஆன் நெட் காலிங் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன் நெட் காலிங் வசதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மற்ற அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Tags : #MONEY #SMARTPHONE #AIRTEL #VODAFONE #JIO #BSNL #IDEA