'1,716 ரூபாய் மளிகை பொருட்களுக்காக 1.02 லட்சம் ரூபாய் அபேஸ்...' இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க பணம் ரிட்டர்ன் வந்திடும்...! கஸ்டமர் கேரினால் நடந்த ஆன்லைன் மோசடி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் வாங்க முயன்றவருக்கு சுமார் 1.02 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவிய காரணங்களால் பலர் மாளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் ஒரு சிலர் மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் ஒரு பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 1.02 லட்சம ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஆசிரியராக பணியாற்றி வரும் 33 வயதான சீமா என்பவர் கடந்த மே மாதம் 24ம் தேதி ஆன்லைனில் ரூ.1,716க்கு மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்து, வங்கிக்கணக்கு மூலம் பணத்தையும் செலுத்தியுள்ளார். பின்னர் அதனை அவரே கேன்சல் செய்துள்ளார். பிறகு வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை திரும்பி செலுத்துமாறு அந்த நிறுவனத்தின் செயலியில் புகார் அளித்துள்ளார்.
கேன்சல் செய்தால் சில மணி நேரம் அல்லதை ஒரு நாளில் பணம் திரும்ப வங்கிக்கணக்கிற்கே வந்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் திரும்பி வராததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை இணையத்தில் தேடி எடுத்து போன் செய்துள்ளார்.
போனில் பேசிய நபர்கள் பணத்தை திரும்ப வங்கியில் செலுத்த சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறி, சில லிங்குகளை கொடுத்துள்ளனர். அதனை பதிவிறக்கம் செய்த சில நொடிகளில் சீமாவின் வங்கிக்கணக்கில் இருந்து சுமார் 1.02 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த சீமா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சீமா இணையத்தில் கண்டுபிடித்த நம்பர் போலி கஸ்டமர் கேர் எண் போலியானது என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த அசாதாரண சூழலில் சிலரின் குறுக்குபுத்தியினால் மோசடிகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் இதுபோன்ற கஸ்டமர் கேர் எண்களை மக்கள் நம்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
